அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து களுவாஞ்சிகுடி நகரில் துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்து பிரசாரம் முன்னெடுப்பு.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பார் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் செவ்வாய்கிழமை(17.09.2024) துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்து பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், கடைத்தொகுதிகள், பேரூந்;து நிலையம், பொதுச்சந்தைத் தொகுதி உள்ளிட்ட பல இடங்களிலும் இத்துண்டுபிரசுர பிரசாரப்பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்
கோவிந்தன் கருணாகரம்,
முன்னாள் கிழக்கு
மாகாண சபை உறுப்பினர்
மா.நடராசா, முன்னாள்
கிழக்கு மாகண
சபையின் பிரதித்
தவிசாளர் இ.பிரசன்னா, ஜனநாயகப்
போராளிகள் கட்சியின்
உபதலைவர் நா.நகுலேஸ், மற்றும்
முன்னாள் உள்ளுராட்சி
மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட
பலரும் இதன்போது கலந்து
கொண்டு துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு
வினியோகித்து பிரசார
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment