23 Sept 2024

நாம் எடுத்த முடிவு தொடர்பில் தற்கொலைக்கு சமனானது என என்னிடம் பலர் வினவினர் - இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் அருண்காந்

SHARE

நாம் எடுத்த முடிவு தொடர்பில் தற்கொலைக்கு சமனானது என என்னிடம் பலர் வினவினர் - இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் அருண்காந்.

தேசிய மக்கள் சக்திக்கு  ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை வழங்குவது என இலங்கை தேசிய ஜனநாயக கட்சி அண்மையில் ஒரு  இறுக்கமான முடிவை எடுத்திருந்தது. எந்தவிதமான ஒரு பிடிமானம் இல்லாத அல்லது தமிழ் மக்கள் வெறுக்கக்கூடிய அல்லது வடக்கு கிழக்கை பிரித்த அவ்வாறான ஒரு கட்சிக்கு ஆதரவாகவும் தமிழ் மக்களை வாக்களிக்க கோருவதை எமது கட்சி எடுத்திருந்தது. இது ஒரு அரசியல் தற்கொலைக்கு சமனானது என என்னிடம் பலர் வினவினர். 

என இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத:துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

நாங்கள் உண்மையிலேயே உணர்வு பூர்வமாக முடிவுகளை எடுக்காமல் அறிவியல் ரீதியாக இலங்கையிலே நடக்கின்ற கூட்டங்களிலே அரசியல் தலைவர்கள் பேசுகின்ற விடயங்கள் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அலை போன்றவற்றை நாம் மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் அவர்களின் அந்த கூட்டணி வெற்றி பெறும் என்பதை நாம் கணித்திருந்தோம். 

அதன் அடிப்படையில் தமிழ் மக்களை சரியாக வழிபடுத்த வேண்டும் என்hதை தமிழ் தலைவர்களுக்கும் அதனைக் கூறிஇருந்தோம்.  எனினும் தமிழ் தலைவர்கள் தங்களது சுய அரசியலுக்காக சுமார் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை குழி தோண்டி புதைப்பதற்காக பொருத்தமற்ற கட்சிகளுக்கு வழங்கியிருந்தார்கள். 

தமிழ் தலைவர் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராகவோ நிதியமைச்சராகவோ பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ வர முடியாது என்பது ஒரு நடைமுறை சார்ந்த விடயமாகும்.  எனவே நாங்கள் கொள்கை வகுப்பாளர்களாக இலங்கை அரசியலில் இருக்க முடியாது உள்ளது. மாறாக கிங் மேக்கராக இருக்கக்கூடிய சூழ்நிலையில் இலங்கைத் தமிழினம் வாழ்ந்து வந்துள்ளது.  இலங்கை அரசியலை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக தமிழர்கள் இலங்கையில் இருந்துள்ளார்கள். அவ்வாறான அனுபவங்களை நாங்கள் கடந்து வந்திருக்கின்றோம்.

ஆகவே இந்த சூழலில் எமது மக்கள் எனது கோரிக்கைகளை ஏற்று, மலையகம் வடக்கு கிழக்கு தெற்கு என எல்லா பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களித்து இருக்கின்றார்கள். குறிப்பாக ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் இந்த தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கின்றார். 

எனவே மாற்று அரசியல் தேவை இருக்கின்றது என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். நடைமுறை அரசியலில் தலைவர்கள் எமது மக்களின் வாக்குகளை வீணடித்துள்ளார்கள். எனவே எனது கோரிக்கைக்கு இணங்க நாட்டில் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது மனமார்ந்த மிகப் பெரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் நாங்கள் இலங்கை ஜனநாயக தேசிய கட்சியாகவே எமது பணி இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும். 

எந்தவொரு சூழ்நிலையிலும் நாம் பெரும்பான்மை கட்சிகளுக்குள் உள்வாங்கப்பட்டு செயற்பட மாட்டோம். எனவே மக்கள் தொடர்ந்து எம்முடன் பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்காக எமது கட்சியும் தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும். என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 



SHARE

Author: verified_user

0 Comments: