16 Sept 2024

காணி திருடர்கள், சட்ட விரோத மண் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள், மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் - சாணக்கியன் எம்.பி.

SHARE

காணி திருடர்கள், சட்ட விரோத மண் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள், மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் - சாணக்கியன் எம்.பி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வு இதுவரையில் இல்லை, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வில்லை, ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும், அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு, பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும், வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள், சட்ட விரோத மண் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள், மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும், இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும்என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை(15.09.2024) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ,  பாராளுமன்ற உறுப்பினர் .கலையரசன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் தி.சரவணபவான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த இரா.சாணக்கியன் பாராளுமன்ற உறுப்பினர். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூடி ஏகமனதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்ததாக தீர்மானித்து. 

இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் மாத்திரமின்னி இலங்கை முழுவதுவும், இருக்கின்ற தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸ அவர்களின் வெற்றியை உறுத்தி செய்யும் முகமாக அனைவரும் ஒன்றாக இணைந்து செயலாற்ற வேண்டும். 

எமது அதிஉச்ச மீளப் பெறமுடியாத அதிகாரப்பகிர்வு, வழங்குவேன் என சஜித் பிரேமதாஸ அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக தெரிவித்ததற்கு இணங்கவேதான் நாங்கள் தேசிய ரீதியில் அவரை ஆதரிப்பதற்கா எடுத்த காரணமாகும். 

மூன்று பிரதான ஜனபதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை நாங்கள் பார்த்தபோது அதில் அதிஉச்ச மீளப் பெறமுடியாத அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜித் பிரேமதாஸ அவர்கள்தான் அவரது விஞ்ஞாபனத்தில் மாத்திரம்தான் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர்தான் நாங்க்ள அவரை தேசிய ரீதியாக ஆதரிக்கவேண்டும் என்று தீர்மானம் எடுத்தோம் ஆனாலும் மாவட்ட ரீதியாக அதில் எங்களுக்கு பல சவால்கள் இருக்கின்றன. 

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வு இதுவரையில் இல்லை, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வில்லை, ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும், அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு, பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும், வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள், சட்ட விரோத மண் கடத்தல்கார கும்பல் உட்பட பல கள்வர்கள், மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும், இவ்வாறான விசமிகள் கைது செய்யப்பட வேண்டும்.  என அவர் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: