20 Sept 2024

வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

SHARE

வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நடைபெறவுள்ள இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. 

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேர்தல் ஒருங்கிணைப்பு நிலையயமாகவுள்ள மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 442 வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புககு மத்தியில் வாகனங்களில் எழுத்துச் செல்லப்பட்டுள்ளன. 

எனினும் அமைதியான முறையில் உத்தியோகஸ்த்தர்களும், பொலிசாரும் தேர்தல் கடமையில் ஈடுபடுட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக இம்முறை 6250 அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட உள்ளதுடன் மாவட்டத்தில் மொத்தமாக 1516 பொலிபாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.












SHARE

Author: verified_user

0 Comments: