26 Aug 2024

முன்னாள் அமைச்சர் பஷீரின் தேசிய நல்லிணக்கத்துக்கான முன்னோடி வேலை திட்டம் ஜனாதிபதி ரணிலின் கைகளில்

SHARE
முன்னாள் அமைச்சர் பஷீரின் தேசிய நல்லிணக்கத்துக்கான முன்னோடி வேலை திட்டம் ஜனாதிபதி ரணிலின் கைகளில்.

உற்பத்தி திறன் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சரும், புத்திஜீவியுமான பஷீர் சேகுதாவுத் தேசிய நல்லிணக்கத்துக்கான முன்னோடி வேலை திட்டம் ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மேலான நடவடிக்கைக்கு சமர்ப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்ட  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பாசிக்குடாவில் உள்ள சுறற்றுலா விடுதி ஒன்றில் வைத்து பஷீர் சேகுதாவூத் நல்லெண்ண சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.

அப்போதே அனுராதபுரத்தை பிரதான தலைமை நகரமாக மையப்படுத்தி இலங்கையில் உள்ள உலர் வலய பிரதேசங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக கடலோர புகையிரத திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான நிபுணத்துவ ஆலோசனையை ஜனாதிபதியிடம் அவர் முன்வைத்தார்.

உலர் வலய பிரதேசங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக கடலோர புகையிரத திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமூக - பொருளாதார மேம்பாடு, சுற்று சூழல் பாதுகாப்பு, இயற்கையோடு இணைந்த வாழ்வியல், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டவும், கட்டியெழுப்பவும் முடியும் என்று இவர் தெரிவித்துள்ளார். 

வரலாற்று முக்கியத்துவமும், கலாசார பாரம்பரிய பெருமையும், ஆன்மீக மகிமையும், சகவாழ்வின் மேன்மையும், நிறைந்த அனுராதபுரத்தை தலைமை நகரமாக கொண்டு இவ்வேலை திட்டம் முன்னெடுப்படுவதை நாட்டின் எல்லா இன மக்களும் நிரந்தர சமாதானம், நீடித்த அபிவிருத்தி ஆகியவற்றுக்கான திறவுகோலாக பார்ப்பார்கள் என்று இவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

வனஜீவராசிகளின் இயற்கை சரணாலயமாக விளங்குகின்ற உலர் வலயத்தை மையப்படுத்திய இவ்வேலை திட்டம் மூலம் சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவதுடன் மேல் மாகாணத்துக்கும், உலர் வலயத்துக்கு இடையில் நிலவி வருகின்ற பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் களைய முடியும் என்பதும் இவருடைய வேலை திட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்.

வடக்கு, கிழக்கு, மலையகம் ஆகியவற்றுக்கு ஊவா மாகாணத்தில் பதுளையில் அமைந்துள்ள அப்புத்தளை நகரத்தில் இருந்து சுற்று சூழலுக்கு உகந்த வகையில் புகையிரத பாதைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்கிற இவரின் வேலை திட்டம் உண்மையிலேயே தூர நோக்கு உடையது என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Basheer Segudawood Proposes Coastal Railways to Enhance Connectivity and Foster National Unity

Former Minister of Productivity Promotion and distinguished intellectual Basheer Segudawood has presented a pioneering model work plan for national reconciliation to President Ranil Wickremesinghe. This proposal aligns with a new initiative to improve connectivity and drive socio-economic development in Sri Lanka's Dry Zone through the development of coastal railways.

The plan envisions Anuradhapura as a central hub, emphasizing its significant historical and cultural heritage as the birthplace of the proto-Sinhala language—a precursor to modern Sinhala—and its deep connections with Tamil. This shared linguistic and cultural heritage underscores the region's potential for fostering unity and harmonious coexistence.

The coastal railways project aims to bridge the economic gap between the Western Province and the less developed Dry Zone, creating environmentally friendly corridors that safeguard the region's wildlife parks while promoting sustainable development.

This initiative is poised to drive economic growth, boost trade and commerce, and open new opportunities for eco-tourism. Additionally, it seeks to strengthen national unity by celebrating the harmonious coexistence of Tamil, Sinhalese, and Muslim communities throughout history. Combined with Segudawood's national reconciliation plan, this proposal represents a significant step towards a more connected and prosperous Sri Lanka, leveraging the Dry Zone's rich historical and natural assets for a brighter, sustainable future.

බෂීර් සේගුදාවුද් සමුද්‍ර තීර ප්‍රදේශයේ දුම්රිය ජාලය යෝජනා කරමින් ජාතික ඒකාබද්ධතාවය සහ ආර්ථික සංවර්ධනය පද්ධතිගත කිරීම සඳහා යෝජනා කරයි

උත්පාදන ප්‍රවර්ධන හිටපු අමාත්‍යවරයා සහ ප්‍රගතිශීලී බුද්ධිමත් විද්වතෙකු වන බෂීර් සේගුදාවුද් ජාතික එකඟතාවය සඳහා නව පියවරක් තබමින් ජනපති රනිල් වික්‍රමසිංහ මහතාට නව අන්තර්ගතයන්ගෙන් සම්පාදිත කාර්ය සැලැස්මක් ඉදිරිපත් කර ඇත. මෙය ශ්‍රී ලංකාවේ ආර්ථික සහ සමාජ සංවර්ධනය වේගවත් කරවීම සඳහා සමුද්‍ර තීර ප්‍රදේශයේ දුම්රිය ජාලයක් සංවර්ධනය කිරීමේ නව ව්‍යාපෘතියක් සමග අනුගත වේ.


මෙම සැලැස්ම අනුරාධපුරය මධ්‍යස්ථානයක් ලෙස භාවිතා කරමින් එහි ඉතිහාසමය සහ සම්ප්‍රදායික වැදගත්කම, සීනළා භාෂාව – යන්න වෙනස් කිරීමට පෙර දක්නට ලැබෙන ප්‍රාක්-සිංහල භාෂාව සහ එහි දෙමළ භාෂාව සමග ඇති ගැඹුරු සම්බන්ධතා අවධාරණය කරයි. මෙම පොදු භාෂාත්මක සහ සම්ප්‍රදායික උරුමය ප්‍රදේශයේ ඒකාබද්ධතාවය සහ සංග්‍රහණය සලසීමට ඇති හැකියාව පෙන්වයි.

සමුද්‍ර තීර ප්‍රදේශයේ දුම්රිය ව්‍යාපෘතිය පශ්චාත් ප්‍රාන්තයේ ඇති ආර්ථික කඩුව ගෙවීම මෙන්ම ප්‍රදේශයේ වනජීවී උද්‍යානයන් ආරක්ෂා කරනු පිණිස පාරිසරික සෞහෘදශීලී මාර්ගයක් නිර්මාණය කරයි.

මෙම වැඩසටහන ආර්ථික වර්ධනය, වෙළඳාම සහ වෙළඳාම් වැඩි දියුණු කරනු පිණිස සකස් කර තිබේ. ඒ සමගම ඊකෝ සංචාරක කටයුතුවලට නව අවස්ථා විවෘත කිරීමද මෙහි අරමුණ වේ. කාලයත් සමග දෙමළ, සිංහල, මුස්ලිම් ජන ප්‍රජාවන්ගේ සංග්‍රහණය සහ ඒකාබද්ධතාවය සමරමින් ජාතික ඒකාබද්ධතාවය ශක්තිමත් කිරීමද මෙහි අරමුණයි.

සේගුදාවුද්ගේ ජාතික එකඟතා වැඩසටහන සමඟ මෙම යෝජනාව සමඟ ශ්‍රී ලංකාව වැඩි සම්බන්ධිත සහ සාර්ථක අනාගතයකට පියවර ගනිමින් උල්ගණනේ විශාල ඉතිහාස සහ ස්වාභාවික සම්පත් මත පදනම්ව දැක්මක් සැකසීම වෙනුවෙන් වැදගත් පියවරක් දක්වයි. 


SHARE

Author: verified_user

0 Comments: