கட்சி முடிவெடுத்தால் நான் ஜனாதிபதியை ஆதரிப்பேன் - கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
கட்சி முடிவெடுத்தால் நான் ஜனாதிபதியை ஆதரிப்பேன் எனது கட்சியின் தீர்மானம்தான் இறுதி தீர்மானம் கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுநர் வேண்டுமென்று எந்த ஒரு உடன்படிக்கையும் சஜித் பிரேமதாசாவுக்கு இடையில் இல்லை தங்களது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற வேண்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வேண்டுமென்றே மீண்டும் ஒரு இன மோதலை ஏற்படுத்தும் முயற்சியாகும் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் குறித்து ஞாயிற்றுக்கிழமை அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலழிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
உண்மையிலேயே நாட்டின் ஜனாதிபதியை அழைத்து எனது பல்கலைக்கழகத்தை மீட்டு தந்தவரை திறந்து வைப்பதற்கு அழைத்த போது அவர் வருகைதந்தார் இதற்கும் அரசியலுக்கும் எதுவித சம்பந்தம் இல்லை. எனது மகனின் திருமண வைபவத்தின் போது ஜனாதிபதி சஜித் எல்லாரும் வந்திருந்தனர். தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வாறான அரசியல் உறவுகளை தவிர்க்க முடியாது.
நான் ஜனாதிபதியிடம் சொன்னேன் எனது கட்சி முடிவெடுத்தால் நான் உங்களை ஆதரிப்பேன் என்று. எனது கட்சியின் தீர்மானம் இறுதி தீர்மானம் ஆகும். எனக்கும் அவருக்கும் உறவில் எதுவித பிரச்சனை இருக்காது. அவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
தங்களது கட்சிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் எது வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான பொய் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களின் அடிப்படை முக்கியமான தேவைகள் பற்றி நாம் அவருடன் கலந்துரையாடினோம். கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுநர் வேண்டுமென்று நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் அவருடன் செய்யவில்லை.
இது வேண்டுமென்றே தமிழ் முஸ்லிம் உறவுகளை சீரழிப்பதற்காகவும் இதன் மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டி தங்களது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற வேண்டி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வேண்டுமென்றே இன முறுகளை ஏற்படுத்தி மீண்டும் ஒரு இன மோதலை ஏற்படுத்தும் முயற்சியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
அவ்வாறான எந்த ஒரு உடன்படிக்கையும் தங்களுக்கு இடையில் இல்லை. என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா கருத்து தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment