வாகரையில் ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்கான நிலைத்து நிற்கக் கூடிய வாழ்வாதார விவசாய முயற்சிகளுக்கான செயல் திட்டம்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் ஒத்துழைப்புடன் டயகோனியா சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இந்தத் திட்டம் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் அமுலாக்கம் செய்யப்படுகின்றது.
இதன் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பிலுள்ள இளைஞர் மன்ற மண்டபத்தில் ஞாயிறன்று( 25.08.2024) இடம்பெற்றது.
அறிமுக நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீட பேராசிரியர் எஸ்.சுதர்ஷன், வாகரைப் பிரதேச செயலக கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள், ஓய்வு நிலை சிரேஷ்ட விரிவுரையாளர் கே.பிறேம்குமார், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிருவாக அலுவலர் கந்தன் நிர்மலா, சமூக ஒருங்கிணைப்பாளர்களான பி.முரளீதரன், குணராஜ் சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனம் வித்தியாசமான அணுகுமுறையில் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்களை கடந்த காலத்திலும் சமகாலத்திலும் அமுலாக்கி வருகின்றது.
குறிப்பாக தற்போது “சமூக முயற்சிகள் மூலம் நீடித்து நிலைக்கக் கூடிய வாழ்வாதார மேம்பாட்டிற்கான மற்றும் புதுமையான கிராமப்புற தொழில் முயற்சிகள்” திட்டத்தின் கீழ் கல்லரிப்பு, தட்டுமுனை, குஞ்சன்குளம் ஆகிய கிராமங்களில் அமுலாக்கம் செயய்பப்படவுள்ள திட்டம் சமூகப் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளது.
ஆதிவாசிகள் சமூகம் வாழும்; குஞ்சங்குளம் கிராமம், அது ஆக அடிமட்ட வாழ்க்கைத் தரத்தில் உள்ள மக்கள் வாழும்; இடமாகும். கல்லரிப்பு, கட்டுமுனை கிராமங்களும் முன்னேற்றப்பட வேண்டிய இடங்களாகும். இந்தத் திட்டத்தை வெற்றியளிக்கச் செய்ய வேண்டும். அதற்கு அனைவரதும் பூரண ஒத்துழைப்புக்கள் தேவை. உற்பத்திகளைத் தொடங்குகின்ற அதேவேளை சந்தைப்படுத்தலுக்கும் உரிய வழிவகைகளை ஏற்பாடு செய்ய செய்து கொடுக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்தையும் முன்னேறற்றும் இலக்கை அடைவதற்கு ஒவ்வொரு அரச அலுவலரும் தனது தார்மீகக் கடiயை நிறவேற்ற வேண்டும்” என்றார்.
இத்திட்டம் கிழக்குப் பல்கலைக்கழக துறைசார் நிபுணர் குழுவினால் முன்னராகவே ஆய்வு செய்யப்பட்டதாகும். அதனடிப்படையில் மூன்று கிராமங்களிலிருந்தும் ஆர்வக் குழுக்களான விவசாய உற்பத்திப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
0 Comments:
Post a Comment