23 Aug 2024

மக்கள் என்னோடு அணிதிரண்டு பணிப்பார்களேயானால் குறுகிய காலத்திற்குள் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கலாம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

SHARE

மக்கள் என்னோடு அணிதிரண்டு பணிப்பார்களேயானால் குறுகிய காலத்திற்குள் சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கலாம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

வருகின்ற நாடாளுமன்றம்மகாணசபைஉள்ளுராட்சிமன்ற தேர்தல்களிலே மக்கள் என்னோடு அணிதிரண்டு பணிப்பார்களேயானால் குறுகிய காலத்திற்குள் தமிழ் போசும் மக்கள் எதிர்கொள்கின்ற  எதிர்கொள்கின்ற சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கலாம் என நான் நம்புகின்றேன்என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பில் வைத்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை(23.08.2024) மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததோடுஅப்பகுதி மக்களின் குறை நிறைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்இதன் பின்னர் ஊடகங்களுக்கும் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்….. 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாடு இருளில் இருந்ததுஅத்தியாவசியப் பொருட்கள் இல்லாமலும்பற்றாக்குறையாகவும்அனைத்திற்கும் வரிசைபொருட்களுக்கு விலை அதிகளமாக இருந்தனஇதனை இரண்டு வருடத்திற்குள் ஜனாதிபதி மாற்றியிருக்கின்றார்இன்னும் அது மாற்றம் பெறவேண்டும் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்படல் வேண்டும்அந்த வகையில ஜனாதிபதி நாட்டின் நலன்கருத்தியே முடிவுகளை எடுத்திருக்கின்றார். 

நாடு இருளில் மூழ்கடிக்கும்போது நாட்டை மீட்கக்கூடியவர் யார் என்பதை அறிந்து அப்போதே நான் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரை சிபார்சு செய்திருந்தேன்என்னுடைய எதிர்பார்ப்பும் இவரால்தான் இப்பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என நான் நம்புகின்றேன். 

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழ் பிரதிநிதிகள் சந்திக்கும்போது 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவீர்களா என கேட்கின்றார்கள் அதனை அவர்களிடம் கேட்க வேண்டியதில்லைஅனைத்தும் அரசியலமைப்பிலே உள்ளதுஅதனைப் பெறுவதற்கு நாங்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.  ஆனால் அதனை என்னால் செய்ய முடியும் வருகின்ற நாடாளுமன்றம்மகாணசபைஉள்ளுராட்சிமன்ற தேர்தல்களிலே மக்கள் என்னோடு அணிதிரண்டு பணிப்பார்களேயானால் குறுகிய காலத்திற்குள் தமிழ் போசும் மக்கள் எதிர்கொள்கின்ற  எதிர்கொள்கின்ற சகல விதமான பிரச்சனைகளையும் தீர்க்கலாம் என நான் நம்புகின்றேன்நாங்கள் சொல்வதைச் செய்பவர்கள்செய்வதைச் சொல்பவர்கள்எனவே எமக்கும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே 4, 5 ஆசனங்கள் இருந்தாலே என்னால் விரைவில் இலகுவாக வேகமாக பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும்என அவர் இதன்போது தெரிவித்தார்.

 







SHARE

Author: verified_user

0 Comments: