அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதை போக்குவரத்தின் தற்போதைய நிலை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்திற்கும், எழுவாங்கரைப் பிரதேசத்திற்குமான பிரதான நீர் வழிப் போக்குவரத்து மார்க்கமாக விளங்குவது அம்பிளாந்துறை – குருக்கள்மடம் படகுப்பாதை போக்குவரத்தாகும். மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இப்போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் படகுப்பாதை மிக நீண்ட காலமாக சேதமடைந்தை நிலையிலேதான் காணப்படுகின்றது.
நாளாந்தம் இப் படகுப்பாதையின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மேலங்கிகள் அணியாமலேயே பிரயாணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்படகுப் பாதையின் இருபுறமும் பொருத்தப்பட்டுள்ள இரும்புச் சங்கிலிகள் துரப்பிடித்த நிலையில் வெடித்து காணப்படுகின்றன
பாதையில் இருபக்க தட்டிகளும் பழுதடைந்த நிலையில் அதற்கு மரத்தடிகளால் தற்காலிகமாக பொருத்தப்பட்ட நிலையில் மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும், அச்சத்தின் மத்தியிலும் பயணம் செய்து வருவததாக கலை தெரிவித்க்கின்றர்.
சில வருடங்களுக்கு முன்னர் கின்னியா குறிஞ்சாங்கேனி படகுப் பாதை விபத்து இடம்பெற்றதுபோல் இப்படகுப்பதைக்கும் ஏற்படாத்திருக்க உரிய அதிகாரிகள் அம்பிளாந்துறை - குருக்கள்மடம் படகுப்பாதையை உடன் சீரமைக்க மன்வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், பிரயாணிகளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment