கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டத்தை விரட்டியடிப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதான வீதியை ஊடறுத்து 35 காட்டு யானைகள் வியாழக்கிழமை(22.08.2024) மாலை கிராமங்களுக்குள் உட்புகுவதற்கு வந்துள்ளன.
இவ்விடையம் குறித்து அப்பகுதி மக்கள் வெல்லாவெளியில் அமைந்துள்ள வனஜீவராசிகள் சுற்றுவட்டார காலயாலயத்திற்கு அறிவித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், சுமார் 2 மணித்தியால பிரயேத்தனத்திற்குப் பின்னர் அப்பகுதி பொதுமக்களின் ஒத்துளைப்புடன், காட்டு யானைக்கூட்டத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர். இதனால் மட்டக்களப்பு மண்டூர் பிரதான வீதியின் போக்குவரத்துக்கு சுமார் அரை மணி நேரம் தடை ஏற்பட்டிருந்தது. .
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் மிக நீண்டகாலமாகவிருந்து இவ்வாறு தொடற்சியாக காட்டுயானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும், அதிகரித்தவண்ணமேயுள்ளன. காட்டுயானைகள் கிராமங்களுக்குள் உட்புகும் பகுதிகளை ஊடறுத்து யானைப் பாதுகாப்பு வேலைகளை அமைத்துதருமாறு அப்பகுதி மக்களின் கோரிக்கையை இற்றைவரையில் யாரும் நிறைவேற்றுக் கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
0 Comments:
Post a Comment