3 Aug 2024

ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் நிதி சணக்கியன் எம்.பி இற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

SHARE

ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் நிதி சணக்கியன் எம்.பி இற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் நிதி எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட  எருவில் பொது நூலகத்திற்கு  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட 03 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் பெறுமதியான புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(01.08.2024) இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

மட்டக்களப்பு மக்கள்  மட்டக்களப்பு அபிவிருத்தி அடையும் என நம்பி இரண்டு இராஜாங்க அமைச்சர்களை உருவாக்கி விட்டனர். அதனை இன்று மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். கிராமங்களுக்கு கட்டாயம் அவசியமான வாசிகசாலையை ஒப்பிடும் போது  புத்தகங்கள் குறைவாக காணப்படுகின்றன.

மட்டக்களப்பில் பாரிய நூலகம் ஒன்றை உருவாக்குவோம் என  கூறியவர்கள், மட்டக்களப்பு மாநகர சபையின் கீழுள்ள பொது நூலக கட்டடத்திலலுள்ள ஒன்று கூடல் மண்டபம் முழுவதும்புத்தகங்களால் மூடிகாணப்படுகிறது.

மக்களை மடையர்களாக்கும் வேலைத்திட்டங்களை நாங்கள் ஒருபோதும் செய்வதில்லை ஜனாதிபதியின் விசேட நிதியின் கீழ் 596 மில்லியன் நிதி எனக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சாணக்கியன் எம்பிக்கு மாத்திரம் ஏன் ஜனாதிபதி வசேட நிதி வழங்கினார் என கேட்பவர்களும் உள்ளார்கள். நான் தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியிடம் எதுவும் கேட்கவில்லை. நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காதவர்கள் ஏதோ ஒன்றை ஜனாதிபதியிடம் தங்களுக்காகப் பெற்றுள்ளார்கள். என்னிடம் கேட்டதங்கிணங்க மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்துதருமாறு கேட்டதற்கிணங்க 596 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதில் முதற்கட்டமாதக 400 மில்லியன் கிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த நிதியை மக்களின் பொது அபிவிருத்திட்டங்களுக்கு பகிரப்பட்டு வருகின்றன. எருவில் கிராமத்தின் பொது மைதானத்திற்கு 5.5 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏனெனில் இப்பிரதேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்குடன் நாம் இருக்கின்றோம்.

ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் எனக்கு நிதி ஒதுக்கீட்டினை வழங்க வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் ஜனாதிபதியின் காரியாலயத்தில் நித்திரை கொள்ளாத குறையாக திரிகின்றனர். மைதான புனரமைப்புக்கு என 160 மில்லியன் இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்த நிதியில் மின் விளக்குகள் மாத்திரம்தான் பொருத்தப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளதாக நாம். அறிகின்றோம்.

குறிப்பாக மட்டக்களப்பை சிங்கப்பூராக மாற்ற போறேன் என்று கோஷமிட்டு வந்து திரியும் இராஜாங்க அமைச்சர்களே உள்ளனர். இதற்கான பாடத்தை இனி வரும் தேர்தலில் மக்கள் புகட்ட வேண்டும்.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களுக்காக நாம் குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம். எருவில் பாடசாலைக்கு அருகில்  நாம் அண்மையில் உழவர் சிலை ஒன்றை திறந்து வைத்தோம் ஆனால் இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் புத்தர் சிலையை கொண்டு வைக்க கூடியவர்கள் அவ்வாறு புத்தர் சிலையை  வைத்தால்தான் அவர்களுக்கு மதுபானசபை அனுமதிப்பத்திரங்கள்  இன்னும் கிடைக்கும். என அவர் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: