எங்களுடைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - முனாள் பிரதியமைச்சர் கணேசமூர்த்தி.
எங்களுடைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நூறுவீதம் உறுதியாக உள்ளார்.
மக்கள் புரட்சியை அடுத்து நடைபெறுகின்ற தேர்தலாக வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் பார்க்கப்படுவதோடு, ஊழல் நிறைந்த அரசாங்கத்தையும் மாற்றம் வேண்டும் என மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள்.
என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை(28.08.2024) மாலை களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
வடகிழக்கு மக்களும் இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என தீர்மானித்துள்ளார்கள். தமிழ் மக்களின் பிரச்சனைகள் 70 வருடங்களாக தீர்க்கப்படாமலுள்ளன. தமிழ் மக்களின் அதிகாரப்பரவாக்கலை எந்த அரசாங்கமும் இதயசுத்தியுடன் நடைமுறைப்படுத்தவில்லை.
இந்நிலையில் எமது கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி, போன்ற கட்சிகளுடனும் போச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதில் 13 வது அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசப்பட்டிருந்தன.
எங்களுடைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நூறுவீதம் உறுதியாக உள்ளார். அதிலுள்ள அதனைத்து விடையங்களும் நடைமுறைப்படுத்தப்படும், குறிப்பாக அதிலே சர்சைக்குரிய விடையமாக அமைந்துள்ள பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதில் எதுவித மாற்றங்களும் நடைபெற மாட்டாது.
தற்போது அனைத்துப் பொருட்களுக்கும் அதிக விலை, மருந்துகளும் இல்லை. இலவச மருந்துகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. பொருட்மக்களுடைய வாழ்கைச் செலவு குறைப்படல் வேண்டும். எனவே இந்த அரசாங்கத்தில் பல மோசடிகள் நடந்துள்ளன. 54 ஆயிரம் மில்லியன் ரூபாய்களை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அவர்களது சகாக்களுக்கு கடன்களை தள்ளுபடி செய்திருக்கின்றார். இது பொரிய துரரோகமாகும்.
எனவே எமது தலைவர் வீடமைப்பு நிருமண அமைச்சராக இருந்தபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 200 இற்கு மேற்பட்ட வீட்டுத்திட்டங்களை அமைத்துள்ளார் எதிர்கட்சித் தலைவராக இருந்து கொண்டு மட்டக்களப்பில் 12 பாடசாலைகளுக்கு கணிணி வசதிகளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் போன்றவற்றையும் வழங்கியுள்ளார்.
சஜித் பிரேமதாஸ அவர்கள் ஆட்சிக்கு வந்தால்
முஸ்லிம் மக்களுக்கு கூடுதலான சலுகைகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு
அப்பட்டமான பொய்யாகும். எமது கட்சி எவருக்கம் எந்த பதவிகளும் வழங்கப்படும் என எந்த
ஒப்பந்தளும் செய்யப்படவில்லை. இவ்வாறான கருத்துக்கள் இனவாதங்களை உண்டுபண்ணவும், சஜித்
பிரேமதாசவுக்கு அளிக்கப்டும் வாக்குகளை இல்லாமல் செய்வதுக்கமான செயற்பாடாகும். என அவர்
இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment