10 தங்கப்பதங்கள் உட்பட்ட 29 பதக்கங்களை வென்ற கொல்லநுலைப் பாடசாலை.
ராம் கராத்தே சம்மேளனத்தினால் தேசிய ரீதியாக அக்கரைப்பற்றில் ஞாயிற்றுக்கிழமை(25.08.2024) இப்போட்டி இடம்பெற்றது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள அதிகஸ்ட பிரதேச பாடசாலையாகவும், இதுவரை எவ்வித பொதுப்போக்குவரத்து வசதியில்லாத பாடசாலையாகவும் இப்பாடசாலை காணப்படுகின்ற அதேவேளை கராத்தே விளையாட்டிற்கான அடிப்படையான விளையாட்டுப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையிலும் குறித்த மாணவர்கள் இச்சாதனையை நிலை நாட்டியுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.
கராத்தே பயிற்றுவிப்பாளரின் தொடர் அர்;ப்பணிப்பிலான பயிற்சியினாலும் உடற்கல்வி ஆசிரியரின் பயிற்சி மற்றும் சேவைகடந்த முயற்சியினாலும் பாடசாலை வரலாற்றில் முதன் முறையாக கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிக்குறைப்பாடுகளுடன் இப்பாடசாலை உள்ளமை குறிப்பிடத்தக்கது. பதக்கங்களைப் பெற்ற மாணவர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும், அதிபர் ஆசிரியர்களையும் விளையாட்டு அர்வலர்களும், கல்விச் சமூகம் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment