பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்ற களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்.
இழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம் வெள்ளிக்கிழமை(12.07.2024) காலை மிகவும் விமர்சையான முறையில் நடைபெற்றது.
முதலில் மூல மூர்த்தியாகிய சுயம்புலிங்கப் பிள்ளையாருக்கு பூஜைகள் நடைபெற்று, பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சுவாமி உள் வீதி, வெளி வீதி வலம் வந்தது.
பின்னர் ஆலய முன்றலில் அமைந்துள் தீர்த்தக் கேணியில் பல்லாயிலக்கணக்கான மக்களின் அரோகரா கோசத்துடன் சுவாமி ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தமாடினார்.
இதன்போது இலங்கையின் நாலா பாகங்களிலுமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும், அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக் கடன்களைச் செலுத்தியிருந்தனர்.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் க.பாஸ்கரன் தலமையில் நடைபெற்ற இத்திருவிழாவின் கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ வி.கு.சிறிஸ்கந்தராசா குருக்கள் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.
இதன்போது பக்தர்கள் பால்காவடி, முள்ளுக்காவடி, பறவைக்காடி, எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களைச் செலுத்தியிருந்தனர்.
இவ்வருடாந்த திருவிழா கடந்த 03 ஆம்திகதி ஆரம்பமாகியது வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் இவ்வருடத்திற்கான திருவிழா இனிதே நிறைவு பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment