29 Jul 2024

சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்.

SHARE

சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் சூரிய மின் உற்பத்தியை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

நாவற்காடு கிராமத்தில் கடந்த 2022 ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்டு இயங்கி வரும் சூரிய சக்தி மின் உற்பத்தி  நிலையயம் மேலும் பல மடங்கு விஸ்தரிக்கப்படவிருப்பதாக கூறி சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையயத்தை அண்டிய கிராம மக்கள்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு  போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த சூரிய மின் உற்பத்தியை விஸ்தரித்தால் தமது விவசாய நிலங்களுக்கும், குடியிருப்புக்களுக்கும் கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இதன்போது தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

இந்த விஸ்தரிப்பு திட்டத்தினை நிறுத்தக் கோரி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர்.






 

SHARE

Author: verified_user

0 Comments: