28 Jul 2024

வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதை அம்மன் ஆலய தீப்பள்ளயத் திருச்சடங்கு.

SHARE

வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதை அம்மன் ஆலய தீப்பள்ளயத் திருச்சடங்கு.

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீப்பளயத் திருச்சடங்கு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுமிர்சையாக இடம்பெற்றது. 

ஆலய உத்சவம் கடந்த 19ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தவநிலை சடங்கு, பாண்டவர் வனவாசம்,  என்பன மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றன. 

திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலயம் மிகவும் தொன்மைவாய்ந்ததும், பழமைவாய்ந்ததுமான ஆலயமாக மாவட்டத்தில் பெரிதும் பேசப்படுகின்ற ஆலயமாகவும் வருடாந்தம் தீப்பள்ளயத் திருச்சடங்கைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்து வருதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.







SHARE

Author: verified_user

0 Comments: