மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் பாரிய விபத்து.
தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமான எரிபொருள் பவுசரொன்று கல்முனையில் இருந்து திருகோணமலைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக சென்ற வேளையில் கட்டுப்பாட்டை இழந்த பவுசர் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கவலையீனத்தால் வீதியை விட்டு விலகிய பவுசர் பேருந்து தரிப்பு நிலையத்தில் மோதியுள்ளதோடு அருகில் இருந்த மின்சார தூண், மற்றும் வீடொன்றின் மதில் மற்றும் நுழைவாயில் ஆகியவற்றினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதுடன், கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்கு சுமார் 2 மணித்தியாலம் தடங்கல் ஏற்பட்டிருந்தது. சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
மேலும் வீட்டின் மதில் மற்றும் நுழைவாயில் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்து பிரிவு பொலிசார், வீதி போக்குவரத்தை சீராக்கியதுடன், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment