18 மில்லியன் செலவில் களுவாஞ்சிகுடி நகரில் போக்குவரத்து சமிக்ஞை பொருத்துவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு.
வளர்ந்து வரும் நகரமான களுவாஞ்சிகுடி மற்றும் பட்டிருப்பு பிரதேசத்தை மையப்படுத்தி வீதிகள் வடிகான்கள் மற்றும் ஏனைய உட்கட்டுமான பணிகளை முதன்மை அடிப்படையில் முன்னெடுத்து வரப்படுகின்றது. இந்நிலையில் களுவாஞ்சிக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள நாற்சந்தியில் போக்குவரத்து சமிக்கை விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 18 மில்லியன் செலவில் குறித்த போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் பொருத்தும் பணிகளை எமது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுடன் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் இணைந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இதன்போது போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜீவானந்தம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்துலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிவகுமார், மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் பரதன், நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன், கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், அப்பகுதி பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சாக இருக்கின்ற எனக்கு 50 இலெட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைக்கின்றது. ஆனால் இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற சந்திரககாந்தன் அவர்களுக்கு 1000 மில்லியன் நிதி ஒதுக்கீடு வீதி அபிவிருத்திக்கு கிடத்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கிடைக்கின்ற நிதியினால் கிழக்கு மாகாணம் மேலும் அபிவிருத்தி பெறும். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி சமிக்ஞை இரண்டு மாத காலங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என்பதோடு பட்டிருப்புத் தொகுதிக்கு மேலும் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பட்டிருப்பு பாலத்தின் அபிவிருத்திப் பணிகளும் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும்.
பல அதவிகளை வகித்து, நன்று அனுபவம் வாய்ந்த ராணில் விக்கிரம சிங்க ஜனாதிபதியினால் தான் ஐ.எம்.எவ் ஊடக் கதைத்து இந்த நாட்டை கடன் வசதிகளைப பெற்று இந்த நாட்மை சீராக முன்கொண்டு செல்ல முடிந்துள்ளது. இதனால் இடைநிறுத்தப்பட்டிருந்த செயற்றிட்டங்களையும் பூர்த்தி செய்யக்கூடிய தன்மை எமக்கு ஏற்பட்டுள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment