ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குட்பட்ட வவுணதீவுப் பிரதேசத்திற்கான நிருவாகத்தினருக்குரிய நியமனக் கடிதங்களை அக்கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய அமைப்பாளர் த.தயாநந்தன் அவர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை(09.06.2024) உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்குரிய கிராங்குளத்தில் அமைந்துள்ள தலைமைக் காரியாலயத்தில் வைத்து இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது அக்கட்சிகுரிய வவுணதீவு பிரதேசத்திற்கான இளைஞர் அணித்தலைவர், மகளிர் அணித் தலைவர், கிராமியத் தலைவர்கள், வட்டார தலைவர்கள், உள்ளிட்ட பல பதவிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிலையில் அக்கட்சிக்கு 20 இலெட்சம் உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான அங்கத்துவப் படிவங்களும் இதன்போது வினியோகிக்கப்பட்டன.
எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்கள்தான் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வருவார். நாம் 20 இலெட்சம் அங்கத்தவர்களை கட்சிக்காக இணைத்துக் கொள்ளும் செய்பாடும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வாழ் மக்கள் அனைவரும் எம்முடன் இணைந்து கைகோர்க்க வேண்டும். என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் த.தயாநந்தன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment