17 Jun 2024

“சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.” மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக்

SHARE


சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.” மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக்

நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.” என மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக்  தெரிவித்தார்.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் வினைத்திறனுள்ள வகையில் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்து சுற்றுச்சூழலை இயற்கை மாறாது பாதுகாக்கும் விழிப்புணர்வு வேலைத்திட்டம் அமுலாக்கப்படுகிறது.

வினைத்திறனுள்ள வகையில் திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்து சுற்றுச்சூழலை இயற்கை மாறாது பாதுகாத்தல் சம்பந்தமான விழிப்புணர்வு  நிகழ்வுகள் மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் பிரதான பஸ் தரிப்பிடம் அமைந்துள்ள கொல்லன் ஆற்றுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(16.06.224) இடம்பெற்றன.

நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த மூதூர் பிரதேச செயலாளர் முபாறக்,  திண்மக் கழிவுகளை கண்ட கண்ட இடங்களில் போட்டு விட்டுச் செல்வதனால் மிக மோசமான சுற்றாடல் சூழல் பாதிப்புக்களை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. டெங்கு நுளம்புகள் பெருகுகின்றன. மேலும், கண்டபடி கொட்டப்படும் திண்மக் கழிவுகள் இயற்கையாக நீர் வழிந்தோடும் இடங்களைத் தடை செய்கின்றன. இவ்வாறு தடை ஏற்படுவதனால் மழை காலங்களில் எதிர்பாராத வகையில் எதிர்பாராத இடங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் நாமே துன்பங்களை அனுபவிக்க வேண்டியேற்படுகிறது.

எனவே, இந்த விடயத்தில் சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும். சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.” என்றார்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் ரீ.திலீப்குமார், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அங்கு சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் விழிப்புணர்வில்லாமல் பல்வேறு தரப்பினராலும் கொட்டப்பட்டுக்கிடந்த திண்மக் கழிவுகள் சிரமதானத்தின் அகற்றப்பட்டன.

இந்த சிரமதானப் பணியில் மூதூர் பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை அலுவலர்கள், கிராம பொதுமக்கள், பெண்கள் இளைஞர் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்  இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோரும் பங்கெடுத்து தாஹா நகர் கிராமப் பிரிவிலுள்ள பகுதிகளை சிரமதானஞ் செய்து திண்மக் கழிவுகளை அகற்றினர்.

மூதூர் பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் மூதூர் பிரதேச சபைச் செயலாளர் எஸ். சத்தியசோதி உட்பட இன்னும் பல உயரதிகாரிகளும்  இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 










SHARE

Author: verified_user

0 Comments: