30 Jun 2024

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொழில் அமைச்சினால்; ஊடகவியலாளர்களுக்கு விழக்கமளிக்கும் நிகழ்வு

SHARE

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொழில் அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஊடக மன்றம் ஸ்தாபித்தல் மற்றும்  களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் வியழக்கிழமை(29.06.2024) மட்டு நகரில் உள்ள தனியார் விடுதியில்  இடம்பெற்றது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரச்சார மற்றும் மக்கள் தொடர்பாடல் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த பயிற்சி நெறியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்புடன் கூடிய தொழில் பயிற்சி வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும் சட்டவிரோத தொழில் முகவர்களால் வெளிநாட்டு வேலை வாய்ப்பு  போது பொதுமக்கள் ஏமாற்றப்படும் விதம் சம்பந்தமாகவும் அதனை பாதுகாப்புடன் முன்னெடுப்பது சம்பந்தமாகவும். 

மியான்மார் நாட்டில் சிக்கியுள்ள இளைஞர்கள் சம்பந்தமாகவும் மனிதக் கடத்தல் சிறுவர்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாகவும் சட்ட ஆதாரங்கள் அதற்குரிய தண்டனைகள் இதன் ஆரம்ப கால தோற்றம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போது பாலியல் சுரண்டல்கள் கட்டாய உழைப்பு கடன் கொத்தடிமை வீட்டு அடிமைத்தனம். என்பன பற்றியும். 

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்த விஜசிங்க தலைமையில் பயிற்சி  கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இப் பயிற்சி நெறியின் இறுதியில் எமது செய்தி பிரிவில் கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில்  களப்பணியாற்றும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான தொழில் உபகரண பைகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



















 

SHARE

Author: verified_user

0 Comments: