27 Jun 2024

உலகத் தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.

SHARE

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு.

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் “உம் உதிரத்தால் அறம் செய் ஓர் உயிர் பிரியா நிலை காக்க உம் உன்னத உதிரம் தர வாரீர்”; எனும் தொனிப் பொருளில் உலக இரத்ததான தினத்தினை முன்னிட்டு மாவட்ட மட்டத்திலான இரத்ததான முகாம் இன்று வியாழக்கிழமை (27.06.2024) களுவாஞ்சிகுடியிலுள்ள சீ.மூ.இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது. 

உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் மண்முனை தென் எருவில் பற்று திட்ட செயற்பாட்டு குழு தலைவி திருமதி.ஏஞ்சலா கணேசலிங்கம் தலைமையிலும்  திட்ட செயற்பாட்டு குழு உபதலைவர் வ.குணசேகரம் ஒருங்கிணைப்பிலும் அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ்ராஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலிலும், அமைப்பின் அமைப்பாளர் யோ.இதயகீதன் அவர்களின் மேற்பார்வையில். இவ்இரத்ததான முகாமானது நடைபெற்றது.

இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ரி.அபயவிக்கிரம மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன்;;, பட்டிருப்பு  வலய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் பி.திவிதரன்;, போரதீவுப்பற்று பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர் ம.சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந் நிகழ்வில் அமைப்பின் இயங்கு நிலையில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான மண்முனை வடக்கு, மண்முனை பற்று, மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று பிரதேச பிரிவுகளில் இருந்து சுமார் 83 அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

மட்டக்களப்பு இரத்த வங்கிப் பிரிவினர் குருதி நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டனர்.

அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச  பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள்; மற்றும்  இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள்  என 45 குருதி கொடையாளர்கள் இவ் உன்னத பணியில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்;.

இதன்போது பார்வை ஒளியியல் பரிசோதனை நிலையத்தால் இலவச கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. 













SHARE

Author: verified_user

0 Comments: