10 Jun 2024

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “தமிழரின் கலையும் கலாசாரமும்” சர்வதேச ஆய்வு மாநாடு – உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம்

SHARE

கிழக்குப் பல்கலைக்கழகத்தில்  “தமிழரின் கலையும் கலாசாரமும்” சர்வதேச ஆய்வு மாநாடு – உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம்.

தமிழரின் கலையும் கலாசாரமும் என்ற தொனிப்பொருளில் இலங்கையின் வவுனியா பல்கலைக்கழகம் அடங்கலாக வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் பல்கலைக்கழங்களுடன் இணைந்து நடத்தும் சர்வதேச ஆய்வு மாநாடு  தமிழரின் கலையும் கலாசாரமும் என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தெரிவித்தார்.

 
எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பான ஊடக சந்திப்பு சனிக்கிழமை பகல், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இவ் ஊடக சந்திப்பில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், மாநாட்டு இணைப்பாளரும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் சி.சந்திரசேகரம், பாண்டிச்சேரி பல்கலைக்கழக சர்வதேச கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் குமரேசன் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ் ஊடக சந்திப்பில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், மாநாட்டு இணைப்பாளரும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் சி.சந்திரசேகரம் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

மேலும் கருத்து வெளியிட்ட கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம்,

கிழக்குப் பல்கலைககழகமானது வவுனியா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை வேலூர் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றோடு இணைந்து நடத்தும் ஆய்வு மாநாடு எதிர்வரும் 13ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

சர்வதேச ஆய்வு மாநாட்டினை இம்முறை கிழக்குப் பல்கலைக்கழகம் ஏனைய சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைந்து எதிர்வரும் 13ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடத்தவுள்ளது.

தமிழரின் கலையும் கலாசாரமும் என்ற தொனிப்பொருளில் இலங்கையின் வவுனியா பல்கலைக்கழகம் அடங்கலாக வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் பல்கலைக்கழங்களுடன் இணைந்து இம்மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாநாட்டில் உலக மொழிகளில் மூத்த மொழியாகக் காணப்படுகின்ற தமிழ் மொழியினை மையாமாகக் கொண்டு இந்த ஆயு;வு மாநாட்டுத் தொனிப்பொருள் காணப்படுகிறது.
 
இம்மாநாட்டின் முக்கிய தொனிப்பொருளாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் இருக்கின்ற எமது தமிழர்களின் பண்பாடுகளையும் கலை உணர்வுகளையும் வெளியுலகிற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு மேடையாக இந்த மாநாடு அமையும். தமிழர்களுடைய நூற்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் உருவாக்கிய கலை சிற்பங்கள, நடனம் மற்றும் அதன் கலை நுட்பங்களை கலாச்சார ரீதியாக இன்று எவ்வாறு பலகலைக்கழக ஆய்வாளர்கள் மத்தியில் நடைமுறையில் எவ்;வாறு சாத்தியமானது என்பது தொடர்பில் இந்த ஆய்வு மாநாடு முன்நிலைப்படுத்தப்படுகின்றது.
 
முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பிறந்த இந்த மண்ணில் இயல், இசை, நாடகம் என்ற மூன்றையும் மையப்படுத்தி இந்த மாநாடு கிழக்குப் பல்கலைக்கழத்தில் எதிர்வரும் 13ம் திகதி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் அறிஞர்கள் அடங்கலாக 80க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்குகொள்கின்றார்கள். குறிப்பாக இந்தியா, இலங்;கை, கனடா, லண்டன், மொரிசீயஸ், சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வருகைதர இருக்கிறார்கள்.
 
இம்மாநாடு சுமார் ஆறு மாதங்கக்கு முன்னரே திட்டமிடப்பட்ட ஒரு மாநாடு இந்த மாநாட்டுக்கு வருகைதர இருக்கின்ற பேராசிரியர்களும் அறிஞர்களும் வேறு நாடுகளில் இருந்து வருகை தருவதனால் இந்த மாநாட்டுக்குரிய ஒத்துழைப்பை கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எங்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

இந்த மாநாட்டில் கருத்துரை வழங்குவதற்காக பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் சிரேஸ்ட பேராசிரியர் இந்த மாநாட்டுக்குப் பிரதம அதிதியாகவும், அவருடன் இணைந்து சிறப்பு அதிதிகளாக வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் வேந்தர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக  இலங்கை யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத்தலைவர் சிறிசாய் முரளி அவர்களும், உலகத் தமிழர் பொருளாதார நிறுவனத்தின் தலைவர் சம்பத் அவர்களும், உட்பட பல பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
இதில் ஆதாரசுருதி உரைகளை வழங்குவதற்காக அண்ணா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் முனைவர் வேல்ராஜ் அவர்களும், அவருடன் இணைந்து இலங்கையில் மூத்த வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களும் உரையாற்ற இருக்கிறார்கள். இவர்களுடன் இணைந்து பல்வேறுபட்ட புலமையாளர்கள் இந்நிகழ்வில் முக்கியமாக கலந்துகொள்ளவுள்ளனர்.  

தற்போது எமது சூழ்நிலையில் நவீன யுகத்தில் தமிழ் பாராம்பரிய முறைகளின் பிரயோகம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இலங்கை உட்பட தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், யாழ் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசியரியர்கள் பங்குகொள்ளும் குழுசார் கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மாநாட்டில் குறிப்பாக விசேடமாகக் கூறக்கூடிய விடயம், தமிழர்கள் பயன்படுத்திய ஆதிகால ஓலைச்சுவடிகளை நவீனமயப்படுத்தி இன்றைய சமூகத்திற்கு ஏற்றவகையில் டிஜிரலைஸ் படுத்தி இறுவட்டுகளாக வெளியீடு செய்யவிருக்கின்றோம். 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை எமது பல்கலைக்கழகத்தின் தமிழத்துறையினரால் டிஜிரலைஸ் செய்யப்பட்டுள்ளன. இவற்றினை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுவருவதற்காக இறுவட்டுக்களாக வெளியிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: