கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று (30.06.2024) ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கலந்து கொண்டார்.
0 Comments:
Post a Comment