10 Jun 2024

எமது இலக்கு வருகின்ற தேர்தலில் அதிகளவு வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

SHARE

எமது இலக்கு வருகின்ற தேர்தலில் அதிகளவு வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான்எமது இலக்கு என்னவெனில் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலிலே வாக்குகளைப் பெற்றவர்கள் போல் அல்லாமல் அதனைவிட அதிகளவு வாக்குகளைப் பெற்று அவர் ஒரு தனித்திறனான ஜனாதிபதி என்பதை நிருபிப்பதற்காகத்தான் நாம் செயற்பட்டு வருகின்றோம்.

என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சிவலிங்கம் சுதர்சனன் தெரிவித்தார்.

பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குபட்பட்ட கோட்டைக்கல்லாறு வலையத்திற்குரிய கட்சியின் காரியாலயம் ஞாயிற்றுக்கிழமை(09.06.2024) மாலை அப்பகுதி வலய அமைப்பார் .ரகரிஷி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தைத் திறந்து வைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…. 

டொலரை நாம் சேமிக்க வேண்டும் அதற்காக வேண்டி எமது பொருளாதாரத்தில் தங்கியுள்ள உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அதனூடாகத்தான் நமக்கு வெளிநாடுகளிலிருற்து வருமானம் கிடைக்கும். 

அதற்காக நாட்டின் தலமைத்துவத்தில் நிபுணத்துவமாவர் இருந்தால்தான்  நாட்டை வழிநடாத்திச் செல்ல முடியும். ஒருவர் போர் செய்தால் அவருக்கு போர் செய்த வீயூகங்கள்தான் தெரியும். நாட்டை ஆளும் வியூகங்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. உள்நாட்டிலே அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு உள்நாட்டு விடையங்களைக் கையாளேவே தெரிந்திருக்கும். 

உள்ளுரிலே ஓர் அமைப்புக்காக ஓர் தலைவரைத் தெரிவு செய்வதற்காக பலரோடு சேர்த்து நாட்டின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் வைத்து ஒப்பீடு செய்து பார்த்தால் அது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அவரது புகைப்படம் அனைவருக்கும் தெரியும்.

இந்திய நாட்டை இஸ்த்திரமானதாக வைத்திருக்கக் கூடிய தலைவரை அந்த நாட்டு மக்கள் மூன்றாவது தடவையாகவும் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதேபோன்றதொரு தெரிவை நாமும் மேற்கொள்ள வேண்டும். 

எமது இலக்கு என்னவெனில் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலிலே வாக்குகளைப் பெற்றவர்கள் போல் அல்லாமல் அதனைவிட அதிகளவு வாக்குகளைப் பெற்று அவர் ஒரு தனித்திறனான ஜனாதிபதி என்பதை நிருபிப்பதற்காகத்தான் நாம் செயற்பட்டு வருகின்றோம்என அவர் இதன்போது தெரிவித்தார்.














SHARE

Author: verified_user

0 Comments: