மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (19.06.2024) இடம் பெற்றது.
இரத்த தானம் வழங்கி உயிரைக் காப்போம் எனும் நோக்குடன், பிரதேச செயலாளர் உட்பட மண்முனைமேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தின் இளைஞர் யுவதிகள், கொடையாளிகள் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கினர்.
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியர் கே. மதனழகன் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு இரத்தத்தினை பெற்றுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment