2 May 2024

மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதாக இருந்தால் அனைத்து அமைச்சுப் பதவிகளும் வடகிழக்கிற்குக் கிடைக்க வேண்டும் - சாணக்கியன் எம்.பி.

SHARE

மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதாக இருந்தால் அனைத்து அமைச்சுப் பதவிகளும் வடகிழக்கிற்குக் கிடைக்க வேண்டும் - சாணக்கியன் எம்.பி.

மட்டக்களப்பிலள்ள மக்கள் ஒரு இலெட்சத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளுக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வாக்களித்ததன் காரணமாக இரண்டு இராஜாங்க அமைச்ர்கள் வந்துள்ளார்கள். ஆனால் எமது மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதாக இருந்தால் அனைத்து அமைச்சுப் பதவிகளும் வடகிழக்கிற்குக் கிடைக்க வேண்டும்

என இலங்கைத் தமிழசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழிலாளர் தின நிகழ்வு மட்டக்களப்பு பெரியகல்லாறு பிள்ளையார் ஆலய முன்றலில் புதன்கிழமை(01.05.2024) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

தமிழ் மக்களுகுத் தலைமைத்துவம் வழங்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மிக முக்கியமான தீர்மானங்களை எதிர்காலத்தில் எடுக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்த்தல் நடைபெறவுள்ளதுசிலவேளை பாராளுமன்றத் தேர்த்தில் நடைபெறவுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் எமது கட்சி சில இறுக்கமான தீர்மானங்களை எடுத்தால்தான் நாம் எமது மக்களையும் மண்ணையும் பாதுக்காக்க முடியும்.

இலங்கையிலே இருக்கின்ற 19 வது திருத்தச் சட்டத்தின் மூலம் 30 இற்கு மட்டுப்படுத்தப்பட்ட கபினட் அமைச்சரவையிலே விகிதாசார அமைப்படையிலே எத்தனை அமைச்சுப் பதவிகள் தமிழர்களுக்குக் கிடைக்கலாம். எனினும் மத்திய அரசாங்கத்திலே அமைச்சுப் பதவிகளைப் பெறுதனால் மாத்திரம் எமது மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய சூழல் இல்லை. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வினூடாகவும், அரசியல் அதிகாரம் என்பன எமது கையில் இருந்தால்தான் நாம் எமது மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்கலாம்.

மாகாணசபை, வடக்கு கிழக்கு இணைந்த ஒர் கட்டமைப்பு போன்ற நிருவாக கட்டமைப்பு தேவை. அதனூடாக தமிழ் மக்களிடத்திலிருந்து கல்வி, சுகாதாரம், நீர்பாசனம், போன்ற வற்றுக்குரிய பல அமைச்சர்கள் உருவாகினாதல்தான் வடகிழக்கிலுள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணடுமுடியும்.  

எனவே எமது கட்சி மக்களை வருகின்ற தேர்தலில் சரியான பாதையில் கொண்டு செல்லாவிட்டால் நாம் மக்களையும் இழந்து மண்ணையும் இழந்து விடுவோம். தமிழரச்சுக்க கட்சிக்கு மகா நாட்டுக்குத்தான் நீதி மன்றம் தடை விதித்துள்ளது. மாறாக கட்சிக்கு வேறு எந்த தடையும் விதிக்கவில்லை. நாளை ஓர் தேர்தல் வந்தார் எமது கட்சி அதில் போட்டியிடும் என அவர் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: