5 May 2024

அபிவிருத்தி திட்டபணிகள் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு எவ்வித பாதிப்பு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் - கிழக்கு ஆளுனர்.

SHARE

அபிவிருத்தி திட்டபணிகள் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு எவ்வித பாதிப்பு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் - கிழக்கு ஆளுனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் வளர்ப்பு சம்பந்தமாக அபிவிருத்தி திட்டபணிகள் முன்னெடுக்கப்படும் போது அப்பகுதி  மக்களுக்கு எவ்வித பாதிப்பு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் -கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான். தேரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தொழில் அமைச்சினால் கடந்த 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட வேலைகள் முன்னெடுக்காமை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இருப்பினும் சம்பந்தப்பட்ட இடங்களில் இவ்வாறான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும்போது அப்பகுதி  மக்களுக்கு எவ்வித பாதிப்பு இன்றி முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும்  இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் உடன் சேர்ந்து மக்களின் வளர்ச்சிக்கான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் மீனவர் அபிவிருத்தி  திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்

மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்பட உள்ள இறால் வளர்ப்பு செயற்றிட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை முன்னிட்டு மாவட்ட அரசாங்க அதிபர் ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இந்த விசேட சந்திப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது இருப்பினும் விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு இங்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

கடத்தொழில் அமைச்சினால் நீர் வேளாண்மை தொடர்பாக இடம்பெற்ற  கலந்துரையாடலின் பின் இறால்வரப்பு சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விசேட அறிவுரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் சனிக்கிழமை மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்தார்.

வாகரைப் பிரதேசத்தில் அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் தலைமையில்  இந்த இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமாக மக்கள் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டதன் பின்னணியில் இந்த விசேட கலந்துரையாடல் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.















 

SHARE

Author: verified_user

0 Comments: