7 May 2024

அரசாங்கத்தின் முயற்சியினால் நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

SHARE

அரசாங்கத்தின் முயற்சியினால் நாடு பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றது - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

அரசாங்கமும், ஜனாதிபதியும் இன்னும் பலரும் கூட்டாக எடுத்துக் கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதார வளற்சியில் வேகமாக வளர்ந்து வருகின்றது.

என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் எருவில்  பிறீடம் விளையாட்டுக் கழகத்தின் 10வது ஆண்டு நிறைவும், சிறப்பு விளையாட்டு நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை(05.05.2024) மாலை நடைபெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…..

நாடு மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்ததை அனவரும் அறிவார்கள். எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வரிசையில் நற்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. பணமிருந்தும் பொருட்கள் இல்லை என்ற நிலமை இருந்தது. இதனால் பலர் நாட்டையே விட்டு வெளியேறினார்கள். இதனால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள்ளேயே எமது நாடு சென்றிருந்தது.

அரசாங்கமும், ஜனாதிபதியும் இன்னும் பலரும் கூட்டாக எடுத்துக் கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதார வளற்சியில் வேகமாக வளர்ந்து வருகின்றது. இவ்வாறு பொருளாதார வீழ்சசியைச் சந்தித்த பல நாடுகள், 50 வருடகாலமாகவும் உலகத்தில் எழவில்லை. ஐரோப்பிய நாடுகளில்கூட விலைவாசிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட கொவிற் தொற்றுக்குப் பின்னர் பணவீக்கம் பாரிய பிரச்சனையாகும்.

தற்போது 400 ரூபாவாக இருந்த டொலர் 298 ரூபாவிற்கும், 460 ரூபாவாக இரந்த யூரோ 316 ரூபாவாகவும் குறைந்துள்ளது. எனவே படிப்படியாக நாடு வளற்சிகண்டு வருகின்றது. இருந்தாலும் மக்களின் வாழ்க்கைச்சுமை குறையவில்லை இது பெரியகவலையான விடையமாகும். இது குறையவேண்டும் அதைத்தான் அரசாங்கமும், ஜனாதிபதியும் விரும்புகின்றனர்அதற்காக பொருட்களின் விலை வெகுவாக் குறைக்கப்படல் வேண்டும். விலைவாசியைக் குறைப்பதற்காக உற்பதித்திட்டங்களை இந்த வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தில், நிதியை ஒதுக்கீடு செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுக்கின்றது.

அதுபோல் காணி உறுத்திப்பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதும், உறுத்திப்பத்திரங்களை வழங்குவதுமான, முக்கிய வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகின்றது. எனினும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எமது அனைவரினதும் ஒட்டுமொத்தமான நோக்கமாகும். அதற்காக வேண்டி நாம் தொடற்சியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது கிராம பெரியோர்கள், பொதுமக்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.












 

SHARE

Author: verified_user

0 Comments: