தேர்தல் காலத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
தமிழர்களின் ஒட்டு மொத்த பிரச்சனைகளும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மீண்டும் வந்து தேர்தல் காலத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குபட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் 50 மில்லியன நிதி ஒதுக்கீட்டடில் முன்னெடுக்கப்பட்டுள்ள வடிகான் அமைக்கும் திட்டத்தை புதன்கிழமை(08.05.2024) ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
பட்டிருப்பு பிரதேசத்திலுள்ள மக்கள் கடந்த காலத்தில் தேர்தலில் வாக்களித்து அரசியல் அங்கீகாரத்தை தமிழ் தேசியம் பேசுகின்றவர்களுக்குக் கொடுத்தார்கள். அதன் விளைவாக் இப்பிரதேசத்தில் வீடுகள், வீதிகள், பாடசாலைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் மிகவும் துர்ப்பாக்கிய நிலையில் இருந்தார்கள். ஆனால் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் பட்டிருப்புப் பகுதியில் பாரிய அளவிலாள அபிவிருத்திப் பணிகளும், வீதி அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எனவே வாக்களிக்கும்போது எந்த தலைவருக்கு வாக்களித்தால் எமது சமூகம் தலை நிமிர்ந்த வாழமுடியும் என்பதை உணர்ந்து அது தற்போது மக்களின் சிந்தனையாக மாறியுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து தங்களுக்கு பின்கதவால் உதவி செய்கின்றவரை ஜனாதிபதியாக மாற்றுவதற்கான தந்திரோபாயமாக கையாள்கின்றார்களா என்ற பல கேள்விகள் இருக்கின்றன.
தமிழரசுக் கட்சி தங்களுக்குள்ளேயே தலைவர்களைத் தேர்வு செய்வதற்கு நீதிமன்றத்தைச் செல்கின்ற இந்நிலையில் மக்களுக்கு எதனைச் செய்யப்போகின்றார்கள். வாக்களித்த மக்கள் நடுத் தெருவில் நிற்கின்றார்கள்.
தமிழர்களின் ஒட்டு மொத்த பிரச்சனைகளும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மீண்டும் வந்து தேர்தல் காலத்தில் முதலைக் கண்ணீர் வடிப்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். எள அவர் இதன்போது தெரிவித்தார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததோடு, வடிகானமைக்கும் செயற்றிட்டத்திற்கு அக்கிராம மக்கள் நன்றியையும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment