4 May 2024

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்துவதா? – கருணாகரம் எம்.பி.

SHARE

ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்துவதா?  – கருணாகரம் எம்.பி.

சர்வதேச நாடு ஒன்றின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து  ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்துவதா? என்பதை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 38 வது நினைவு தின நிகழ்வு வெள்ளிக்கிழமை(03.05.2024) மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயலாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்..

எங்களது போராட்ட வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டுள்ளோம் அதில் ஒன்றுதான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஆகும்.

வடகிழக்கு மக்கள் சோற்றுக்காக தான் போராடினார்கள் என்பது ஜனாதிபதி வேட்பாளர் அனுரா குமார திசாநாயக்காவின்  கணிப்பு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என்கிறார். இதனை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ளவர்களை அழைத்து கூறவேண்டும். அதுமாத்திரமின்றி இதனை தெற்கில் உள்ள மக்களுக்கும் தெரிவித்து அவரது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அதனை பகிரங்கமாகக் கொண்டு வரவேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எங்களது பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும். நாங்கள் சுயமாகச் செற்படுவதற்குத் தயாராக இருக்கின்றோம், எங்களது உரிமைகளைப் பறிக்கப்படுகின்றார்கள் என்ற செய்தியை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கு உணர்த்த வேண்டிய தேவை இருக்கின்றது. எங்களால் நிறுத்தப்படுகின்ற  பொது  வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட மாட்டார் அது அனைவரும் அறிந்த விடயம் நாங்கள் வாக்களித்து தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி எங்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை.

கடந்த 6 ஜனாதிபதிகளில் 2 ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்படுவதற்கு நாங்கள் வாக்களித்திருக்கின்றோம். எனவே நாங்கள் வாக்களித்தவர்களும், வாக்களிக்காதவரும்எமக்கு ஒன்றும் செய்யவில்லை. நாம் தற்போது சிதறுண்டு கிடக்கின்றோம். இக்காலத்தில் எமது பலத்தை நாம் காட்டாமல் விட்டால் எங்களது சந்ததிகூட நிம்மதியாக வாழமுடியாத நிலையாகிவிடம்

 எனவே நாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் தேவைஏற்படின் சர்வதேச நாடு ஒன்றின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து ஜனாதிபதித் தேர்தலில் வாக்குறுதிகளைப் பெற்று வாக்களிப்பதா? அல்லது பொதுவேட்பாளரை நிறுத்துவதா? என்பதை நாங்கள் ஒன்றாக முடிவெடுக்க வேண்டும். இல்லையேல் அவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை அற்றவர்கள், தற்கத சுயநலத்திற்காகவும், தற்களுடைய கட்சி நலத்திற்காகவும் அரசியல் செய்பவர்கள், என்கின்ற நிலைக்கு தாற்களே தற்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்



 

SHARE

Author: verified_user

0 Comments: