மனித உரிமை முதலுதவி மையத்தின் செய்பாடுகள் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் வினியோகம்.
மட்டக்களப்பில் அமைந்துள்ள மனித உரிமைகள் முதலுதவி மையத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி அனூடாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மனித உரிமைத் தொண்டர்களால் அவ்விடையம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
நமது குடிமைப் பொறுப்பை நிறைவேற்றுவோம், உரிமைகளைக் காப்பாற்றுங்கள், என்ற தொணிப்பொருளின்கீழ் மனித உரிமைகள் முதலுதவி மையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சந்திவெளி பிரதான வீதியிலிருந்த இயங்கி வருகின்றது.
இந்த மனித உரிமைகள் முதலுதவி மையத்தினால் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டு வரப்படுகின்றன.
மக்கள் மத்தியில் மீறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இம்மையத்திற்கு நேரில் சென்று அல்லது 074 328 0836 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது முறைப்பாடுகளை தெரிவிக்கமுடியும்.
இந்நிலையில் மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த மனித உரிமைகள் முதலுதவி மையத்தின் சேவைகள் தொடர்பிலும், இம்மையத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முகமாகவும் தொண்டர்களால் சித்தாண்டி, சந்திவெளி, வந்தாறுமூலை, உள்ளிட்ட பல பகுதிகளிலும் இத்துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
உங்களைத் திட்டவோ அடிக்கவோ, சட்டத்திற்குப் புறம்பாக கைது செய்யவோ பொய்வழக்குப் போடவோ யாருக்கும் உரிமை இல்லை. எந்தவொரு அரசு அதிகாரியும், அப்படிச் செய்தால் அது உங்கள் அடிப்படை உரிமை மீறுவதாகும். எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தனத கடமைகளைச் செய்யாமல் புறக்கணிக்கும் போதும் வேண்டுமென்றே தாமதப்படுத்தும், அல்லது தனது கடமைகளைச் செய்ய இலஞ்சம் கேட்கும் எந்தவொரு அரசாங்க அதிகாரிக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பது ஒரு குடிமகனாக உங்கள் பொறுப்பாகும் என அத்துண்டுப்பிரசுரத்தில் விளக்கப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment