18 May 2024

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு கதவு திறத்தல்.

SHARE

செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு கதவு திறத்தல்.

கிழக்கிங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உத்சவம் வெள்ளிக்கிழமை(17) இரவு கதவு திறத்தவுடன் ஆரம்பமாகியது.

கிராங்குளம், குருக்கள்மடம், மாங்காடு, தேற்றாத்தீவு, செட்டிபாளையம் களுதாவளை, ஆகிய ஆறு  கிராம மக்களாலும், வருடாந்தம் மிகவும் சிறப்பான முறையில் மிகவும் தொன்று தொட்டு இக்கண்ணகை அம்மன் திருச்சடங்கு நடைபெற்று வரப்படுகின்றன.

சிவ ஸ்ரீ.கு.தேவராசா தலைமையிலான கட்டாடியார் தலைமையில் சடங்குகள் நடைபெறுகின்றன.

சடங்கு காலத்தில் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கண்ணகை அம்மன் வழங்குரை படித்தல் இடம்பெற்று வருகின்றமைகும் சிறப்பம்சமாகும்.

எதிர்வரும் திங்கட்கிழமை(20.05.2024)  வருடாந்த திருச்சடங்கு திருக்குளிர்த்தியுடன் நிறைவு பெறவுள்ளது.


















SHARE

Author: verified_user

0 Comments: