திடீர் மரண விசாரணை அதிகாரியாக சிவபாதம் நியமனம்.
மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமத்தைச் சேர்ந்த தெய்வநாயகம் சிவபாதம் திடீர் மரணவிசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை நீதி, சிறைச்சாலை அலுவல்கள், மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள் கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்துள்ளார்.
இதன்போது பிரதியமைச்சர் அனுராதா ஜெயரெட்ண அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலர் பிரசன்னமாகியிருந்தனர்.
களுமுன்தன்வெளிக் கிராமத்தைப் பிறப்பிறமாகக் கொண்ட தெய்வநாயகம் சிவபாதம் அவர்கள் தற்பொழுது திருப்பழுகாமம் கிராமத்தில் வசித்து வருகின்றார். இவர் சமாதான நீதவானாகவும், போரதீவுப் பற்றுப் பிரதேச மத்தியஸ்த்த சபை உறுப்பினராகவும், இருந்து அப்பகுதியில் பல சமூக சேவைகளைச் செய்து வருவதுடன், இன்னும் கிராமிய மட்ட பல சமூக சேவை அமைப்புக்களுடனும் இணைந்து சேவையாற்றி வருகின்றார் என்தும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment