10 Apr 2024

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது கல்விச் சமூகம் ஆர்ப்பாட்டத்தில்.

SHARE

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது கல்விச் சமூகம் ஆர்ப்பாட்டத்தில்.

மட்டக்களப்பு மாவட்டம் பாட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது எனத் தெரிவித்து புதன்கிழமை(10.04.2024) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் கல்விச் சமூத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நேர்மையான அதிகாரியை இடம்மாற்றாதே, எமது பிள்ளைகளின் மீது அக்கறைகாட்டும் அதிகாரியை இடம்மாற்றாதே, போன்ற பல்வேறு வாசகங்களை எழுதியவாறு ஆர்ப்பாட்டக்கார்கள் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கல்விப் பணிப்பாளரை இடமாற்றம் செய்யக் கூடாது என அப்பகுதி கல்விச் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அடங்கிய மகஜரை கிழக்கு மாகாண ஆளுனரிடம் வழங்குவதற்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து  கொண்ட பாடசாலை அதிபர் ஒருவரிடம் வழங்கி வைத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.















SHARE

Author: verified_user

0 Comments: