26 Apr 2024

மட்டக்களப்பு ஆரையூரின் பட்டத்திருவிழா

SHARE

 மட்டக்களப்பு ஆரையூரின் பட்டத்திருவிழா.

மட்டக்களப்பு ஆரையம்பதியில் பட்டத்திருவிழாவானது ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்  ஆரையம்பதி கடற்கரையில் விமர்சையாக இடம் பெற்றது.


"அலைபேசியில் மூழ்கித்தலைகுனியும் சமுதாயத்தை அண்ணாந்து பார்க்கவைப்போம்” என்னும் தொனிப்பொருளில் இத் திருவிழா நடைபெற்றது.

ஆரையம்பதியின் மூத்த விளையாட்டுக்கழகமான ஆரையூர் விளையாட்டுக்கழகம் கிழக்கிலங்கையில் முதன் முறையாக இப் பட்டம் விடும் விழாவை அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டத்திருவிழாவின்போது 40 க்கு மேற்பட்ட பட்டங்கள் போட்டியிட்டதுடன் முதல் மூன்று இடங்களைப்பெற்ற பட்டங்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் அதிதிகளினால்  வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆரையம்பதி ஶ்ரீ கந்தசுவாமி ஆலய குரு உமாபதசர்மா, கிழக்குமாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன் , பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். சுகந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன்
நடுவர்களாக கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர் மாதவறாஜா ஶ்ரீசாந்தன், ஆசிரியர் விஜயரெட்ணம் விஜயேந்திரன், கழக சிரேஷ்ட உறுப்பினர் ரவிச்சந்திரன், யுதிக்‌ஷன் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.










SHARE

Author: verified_user

0 Comments: