அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி.
சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறனுடையதாக முன்னெடுக்கும் வகையில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்தினால் அப்பகுதியில் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் அதன் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் நவோலோஜிதன் தலைமையில் சனிக்கிழமை(06.04.2024) இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாகவும் வளவாளர்களாகவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி மற்றும் அருட்தந்தை யோசுவா அடிகள் கலந்துகொண்டு பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்குத் தேவையான திட்டமிடல்கள், தலைமைத்துவம்வகித்தல் போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.
கடந்த யுத்த காலத்தில் பொருளாதார நெருக்கடியான காலகட்டத்திலும்கூட வடக்கு மாகாணத்தில் எவ்வாறான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
தற்போது போதைப்பொருள் பாவனையில் மாணவர் சமூகம் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சனைகள் சம்பந்தமாகவும் இத்தலைமைத்துவ பயிற்சியின்போது வளவாளர்களால் விரிவான விளக்கமளிக்கப்பட்டன.
இதன்போது மேலும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை அலுவலக முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் வைத்தியர்கள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment