தம்பிலுவிலில் பிரசித்தி பெற்ற கண்ணகி அம்மன் ஆலய சங்காபிஷேக பால்குட பவனி.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பண்பாட்டு மணம் கமழும் இயற்கை எழில் தவழும் வரலாற்றுப் பெருமை கொண்ட தம்பிலுவிலில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் கண்ணகி அம்மன் ஆலய சங்காபிஷேக பால்குட பவனி சனிக்கிழமை(06.04.2024)இடம்பெற்றது.
தம்பிலுவில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பால்குட பவனியானது தம்பிலுவில் பிரதான வீதியின் ஊடாக கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது.
ஆலய பிரதமகுரு சிவ ஸ்ரீ லோகநாதக் குருக்கள் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக, ஹோமம் பூசைகள் நடைபெற்று, தொடர்ந்து விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டன.
ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு அடியார்கள் தமது சிரசினில் நூற்றுக்கணக்கான பால்குடங்களை சுமந்துவந்து கண்ணகி அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
பாலாபிஷேகத்தினை தொடர்ந்து அலங்கார பூசைகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment