16 Apr 2024

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம் - கடமைகளைப் பொறுப்பேற்றார்.

SHARE

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் நியமனம் - கடமைகளைப் பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக செ.புவனேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றயத்தினம் செவ்வாய்கிழமை(16.04.2024) பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் தனது கடமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஒருவாரகாலமாக ஏற்கனவே பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சி.சிறிதரன் அவர்களை இடமாற்றம் செய்யவேண்டும் என ஒரு பகுதியினரும், அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என இன்னுமொரு பகுதியினரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் மேலதிக கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிவந்த இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தரத்தையுடைய செல்லத்துரை புவனேந்திரன் அவர்கள் புதிதாக பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை புதிய வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அப்பகுதி கல்விச் சமூகத்தினர் அங்கு நேரில் வந்து தமது வாழ்த்துக்களையும் தெரிவிதனர்.






SHARE

Author: verified_user

0 Comments: