இந்தியா நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கச்சதீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கையை ஏற்படுத்டுவோம் என்பது இந்திய மக்களை ஏமாற்றும் செயலாகும்.
தேர்தலுக்காக கச்தீவை மீட்டெடுப்போம், அது எங்களால் செய்யப்பட்ட உடன்படிக்கை அல்ல, கச்சதீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கையை ஏற்படுத்துவோம், என இந்திய அரசியல் கட்சிகள் தெரிவித்து வருவதானது இந்திய மக்களை ஏறமாற்றுகின்ற செயலாகும்.
என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் வியாழக்கிழமை(15.04.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
இலங்கையின் அரசியல் களத்தில் தற்போது ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தியதாக உள்ளது. அதுபோன்று இந்திய அரசியல் களத்தில் கச்சதீவை மையப்படுத்தி முன்கொண்டு செல்லப்படுகின்றது. கச்சதீவு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையாகும். அது வெறுமனே இந்தியாவிலுள்ள அரசியல் கட்சகளிடத்தில் பகுப்பாய்வு செய்யவேண்டிய தேவை இல்லை. அக்காலத்தில் எந்த ஆட்சி நிலவியதோ அப்போது இரு நாட்டு தலைவர்களும் செய்து கொண்டு ஒப்பந்தமாகும்.
தேர்தலுக்காக கச்தீவை மீட்டெடுப்போம், அது எங்களால் செய்யப்பட்ட உடன்படிக்கை அல்ல, கச்சதீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கையை ஏற்படுத்துவோம், என இந்திய அரசியல் கட்சிகள் தெரிவித்து வருவதானது இந்திய மக்களை ஏறமாற்றுகின்ற செயலாகும்.
இரு நாடுகளுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கடப்பாடு உள்ளது. அது தனிப்பட்ட ஒரு கட்சிக்கு பங்கு இல்லை என்பது எனது கருத்தாகும். இந்திய தேர்தல் முடிவுற்றதும் கச்சதீவு தொடர்பான கருத்துக்கள் ஓய்ந்துவிடும் அததான் உண்மையுமாகும்.
கச்சதீவு பிரச்சனையை விடுத்து இல்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு இரு நாடுகளின் அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும். என அவர் அதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment