வாகரையில் முன்னெடுக்கப்படும் இறால்பண்ணை, இல்மனைட் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டு நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுவரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய்யுமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிராம மக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டடில் வியாழக்கிழமை(25.04.2024) மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இயற்கை வளங்களை அழிக்கும் செயற்திட்டங்கள் தமக்கு வேண்டாம், இறால்பண்ணை, மற்றும் இல்மனைட் கம்பனிகளைத் தடைசெய்ய வேண்டும், எனத் தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இத்திட்டங்கள் தொடர்பில் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளுனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோசங்களை முன்வைத்தனர்.
0 Comments:
Post a Comment