19 Apr 2024

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறப்போகின்றது -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

SHARE

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறப்போகின்றது -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறப்போகின்றது. இந்நிலையில் எந்தக்கட்சியும் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளோம் என்பதை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை. தமிழ் கட்சிளுக்குள்ளும் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளனஎன இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட எருவில் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட 8.4 கிலோமீற்றர் உள்ளக வீதிகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களால் வெள்ளிக்கிழமை(19.04.2024) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளன.

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லா அவர்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார் அவரது வாக்கு பலம்தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் எனவும் தெரிவித்திருந்தார் அவர் வெற்றிபெற்றிருந்தாரா? ஆவ்வாறாயினும் இலங்கையிலிருக்கின்ற சிறுபான்மை மக்களுக்குள்ளேயே ஒருவரை பொது வேட்பாளராக தீர்மானிக்க வேண்டும். ஆனால் தற்போது இருக்கின்ற கட்சிகளுக்குள்ளேயே யாருடைய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவது என்பது தொடர்பில் போட்டித்தன்மை காணப்படுகின்றது. என அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் வர்த்தக இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம நிறைவேற்று பொறியியலாளர் வரதன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் வை.சந்திரமோகன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம நிறைவேற்று பொறியியலாளர்

லிங்கேஸ்வரன் உள்ளிட்ட கிராமிய பொதுஅமைப்புக்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது 347 ரூபா மில்லியன் செலவில் காபட் மற்றும்  கொங்கிறிட் வீதிகளாக புனரமைக்கப்பட்டுள்ள வீதிகளே இராஜாங்க அமைச்சரினால் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டன.

இதன் போது தமது கிராமத்தில் நீண்ட காலமாக பாரிய பிரச்சனையாக இருந்து வந்த வீதிகளை செப்பனிட்டு கொடுத்தமைக்காக அப்பகுதி மக்கள் இராஜாங்க அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.











 

SHARE

Author: verified_user

0 Comments: