மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்தி பிள்ளையார் கோவில் கொடியேற்றம்.
விநாயகரின் உருவத்தையே கோபுரமாக கொண்டுள்ள கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச் சந்தி பிள்ளையார் போராலயத்தில் சித்திரைப் புத்தாண்டு விசேட பூஜை வழிபாடுளைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (14.04.2024) கொடியேற்றமும் இடம்பெற்று மஹோச்சவப்பெருவிழா ஆரம்பமாகியுள்ளது.
செட்டிபாளையம் சித்தி விநாயார் ஆலயத்திலிருந்து யானை மீது கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு கிரியைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து கொடியேற்றம் இடம்பெற்றது.
இதன் போது அப்பகுதியைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதி தேரோட்டம் இடம்பெற்று 23 ஆம் திகதி துற்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நிறைவு பெறவுள்ளது.
கிரியைகள் யாவும் சு.கு.விநாயகமூர்த்திக் குருக்கள் தலைமையிலான குழுவின் மேற்கொள்கின்றனர்.
0 Comments:
Post a Comment