11 Apr 2024

வலயக் கல்வி அலுவலகத்தில் நூலகம் திறந்து வைப்பு.

SHARE

வலயக் கல்வி அலுவலகத்தில் நூலகம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் பாட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் புதிதாக நூலகம் ஒன்று புதன்கிழமை(10.04.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். இதில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், வலயக் கல்வி அலுவலகத்தின் உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுவாக வலயக் கல்வி அலுவலகங்களில் நூலகம் அமைக்கப்படுவதில்லை ஆனாலும் நாம் எமது வலயக் கல்வி அலுவலகத்தில் தற்போது நூலகம் ஒன்னை அமைத்துள்ளோம். இந்நூலகத்திற்கு 10000 புத்தகங்களைச் சேகரிப்பதே எமது இலக்காகும். தற்போதைய நிலையில் வலயத்திலுள்ள அதிபர் ஆசிரியர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சில புத்தகங்கள் இங்கு உள்ளன. இதனை எதிர்காலத்தில் டிஜிட்டல் நூலகமாக மாற்றுவதே எமது நோக்கமாகும். இந்த நூலகத்தை அதிபர் ஆசிரியர்கள் நன்கு பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் கற்பித்தலை வளப்படுத்த முடியும் என இதன்போது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் தெரிவித்தார்.











SHARE

Author: verified_user

0 Comments: