1 Apr 2024

மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவு சங்கத்திற்கு பணிப்பாளர் சபை தெரிவு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவு சங்கத்திற்கு பணிப்பாளர் சபை தெரிவு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவும் பேராளர் மாநாடும், களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சங்கத்தின் கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(31.03.202) நடைபெற்றது.

இதன்போது சங்கத்திற்குரிய பணிப்பாளர் சபை உறுப்பினருக்கான தெரிவு தேர்தல் மூலம் இடம்பெற்றது. பணிப்பாளர் சபையின் தலைவராக மே.வினோராஜ் அவர்களும், உபதலைவராக .சதானேசன் அவர்களும், மேலும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக  மா.திருநாவுக்கரசு .குணசேகரன் .றுத்றா .தனுசியா  சு.துருபதன் ஆகியோர்களும்  தெரிவு செய்யப்பட்டனர்.








SHARE

Author: verified_user

0 Comments: