1 Apr 2024

மட்டக்களப்பில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு.

SHARE

மட்டக்களப்பில் 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு.

மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக புதிதாக நிர்மாணிக் கப்பட்ட 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ராமகிருஷ்ண மிஷினின் நூற்றாண்டு தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் இறுதி நிகழ்வான மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கருகில் புதிதாக நிர்மாணிக் கப்பட்ட 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக குறித்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா தளங்களின் அடையாளமாக விளங்கும் கல்லடி பாலத்தில் மட்டக்களப்பு நகரில்  நுழைவாயிலில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிலையை இராமகிருஷனமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திரைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சுவாமி விபுலானந்தர் மணிமண்டலத்தின் பொது விழாவும் நடைபெற்றது.

மங்கள வாத்தியங்கள் முழங்க ராமகிருஷ்ணரின் மந்திரங்கள் ஒலிக்க இராமகிருஷனமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற பூஜை நிகழ்வுகளின் பின்பு சிலையின் திருவுருவம் பொதுமக்களின் பார்வைக்காக  திறந்து வைக்கப்பட்டதுடன். ஞாபகார்த்த நினைவுபடிகம் திறந்து வைக்கப்பட்டன

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ்அவர்களும்மேலும் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கருணாகரம் , இரா.சாணக்கியன்மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர்கள்கல்வி திணைக்கள அதிகாரிகள்மாணவர்கள்பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.






















SHARE

Author: verified_user

0 Comments: