வந்தாறுமூலை ஸ்ரீ மாகாவிஷ்ணு ஆலய விசேட யாக பூஜையும் வருஷாபிஷேக மணவாள கோல விழாவும் 1008 சங்காபிஷேகமும்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்ரீ மாகாவிஷ்ணு ஆலயத்தில் விசேட யாக பூஜையும் வருஷாபிஷேக மணவாள கோல விழாவும் 1008 சங்காபிஷேகம் மற்றும் அபிஷேகத்துடன் கூடிய வசந்த மண்டப பூசையும் வெகு சிறப்பாக திங்கட்கிழமை(22.04.2024) நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஓராண்டு நிறைவை முன்னிட்டு வருஷாபிஷேக மணவாள கோல விழாவும் இதன்போது வெகு சிறப்பாக நடைபெற்றது. கணபதி ஹோமம் யாக பூஜை வழிபாடுகள் நடைபெற்று, பூர்ண கும்பம் எழுந்தருளச் செய்தலுடன் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வசந்த மண்டப பூசையும் சுவாமி உள்வீதி உலாவருதலும் இடம்பெற்றதுடன் பூசை நிகழ்வுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, மாதவா, மதுசுதனா, நாராயணா, என்ற இறைவன் நாமங்களுடன் மகா விஷ்ணுப் பெருமானை வேண்டி வழிபாடு செய்தனர்.
இந்த வருஷாபிஷேக 1008 சங்காபிஷேக பூசை நிகழ்வுகளை சப்தரிஷி குருபீட சாகித்திய பாஸ்கர் குமார விக்னேஸ்வர குருக்கள் அவர்களுடைய தலைமையிலான குருமார் மேற்கொண்டனர்.
0 Comments:
Post a Comment