களுவாஞ்சிகுடி புத்தடி நாகதம்பிரான் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி புத்தடி நாகதம்பிரான் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்ட்ட பத்தன மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா வெள்ளிக்கிழமை(29.03.2024) இடம்பெற்றது.
கடந்த புதன்கிழமை கர்மாரம்ப நிகழ்வு இடம்பெற்று வியாழக்கிழமை பால்காப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன்போது மூலமூர்த்திக்கும், ஏனைய பரிபாரத் தெய்வங்களுக்கும் கும்பாபிஷேக கிரியைகள் இடம்பெற்றன
கிரியைகள் யாவும் கிரியாயோதி கிரியா திலகமத் சிவ ஸ்ரீ சண்முக மயூரவதனக் குருக்கள் தலைமையிலான குருமார்கள் மேற்கொண்டனர்.
இதன்போது நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment