ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டு.மாவட்ட நிருவாகச் செயலாளர் நியமனம்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நிருவாகச் செயலாளராக மட்டக்களப்பு குருக்கள்மடம் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியநாதன் ஜோன் கெனத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ அவர்களின் ஆலோசனைக்கு அமைய அக்கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் இந்நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment