8 Mar 2024

மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்வாதாரக் கடன் வழங்கி வைப்பு.

SHARE

மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்வாதாரக் கடன் வழங்கி வைப்பு.

அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிருக்கான வாழ்வாதார கடன் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர்  சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதபோது கல்லாறு சமுர்த்தி வலயத்திருந்து தெரிவுசெய்யப்பட்ட 08 பயனாளிகளுக்கு சுமார் 1400000 ரூபாவும்மாங்காடு சமுர்த்தி வங்கியினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு 17 பயனாளிகளுக்கு சுமார் 1495000 ரூபாவும்சுயதொழில் முன்னேற்றத்திற்காக வழங்கப்பட்டதுடன.

மேலும் இதன்போது பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.புவனேஸ்வரி ஜீவகுமார்திட்ட முகாமையாளர் திருமதி விமலா ஜோகேந்திரன்சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.உதயசுதன் மற்றும்  வங்கிகளின் முகாமையாளர்கள்அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


















SHARE

Author: verified_user

0 Comments: